தலைமை கழக அறிக்கை
தமிழகத்தில் நீட் தேர்வால் முதல் மரணம் அனிதா என்ற பெண் அன்றிலிருந்து இன்று வரை பல மரணங்களை இந்த தமிழகம் சந்தித்துக் கொண்டே இருக்கிறது நீட் தேர்வு என்பது மாணவர்களின் திறனாய்வை மேம்படுத்தும் மற்றும் தகுதியான மாணவர்களுக்கு அவர்கள் ஏழையோ பணக்காரர்களோ மருத்துவத்தில் கட்டாயம் இடம் கொடுக்க வேண்டும்
நீட் தேர்வு வருவதற்கு முன்பு எத்தனையோ மருத்துவ கல்லூரிகள் ஒவ்வொரு இடங்களையும் பல லட்சங்களுக்கு விற்பனை செய்தது
நீட் தேர்வு வந்த பின்பு ஏழை மாணவர்கள் தகுதியான மாணவர்கள் இதில் பயன்படுவது தெள்ளத் தெளிவாக தெரிய வருகிறது
ஆனால் நமது அரசுப்பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவர்கள் நீட் தேர்வில் தட்டு தடுமாறுவதன் காரணம் அரசு பள்ளிகளில் உள்ள பாடத்திட்டங்கள் சிபிஎஸ்சி பாடத்திட்டத்திற்கு இணையாக இல்லை என்பதே காரணம்
தற்போது மத்திய அரசை குறை கூறும் தமிழக அரசு நீட் தேர்வை எதிர்ப்பதற்கு பதிலாக அரசு பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்களை சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு இணையான பாடத்திட்டத்தை நாம் மாற்றிக் கொடுக்கலாம் இதன் மூலம் நீட் தேர்வை எமது மாணவர்கள் துச்சமான கடந்து செல்வார்கள்
நமது கல்வியை மேம்படுத்துவதன் மூலம் நீட் தேர்வை மாணவர்கள் தைரியமாக எதிர்கொள்வார்கள் இங்கு நீட் தேர்வு வேண்டாம் என்பதை விட நீட் தேர்வுக்கு இணையான கல்வித் திட்டம் தமிழக அரசு வலுப்படுத்த வேண்டும் என்பதே பல்வேறு பெற்றோர்களின் கோரிக்கையாகவும் உள்ளது
அதுவே எனது கோரிக்கையும் கூட நாம் தொடர்ந்து மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் நீட் தேர்வை மிக பூதாகரமாக காட்டுவதற்கு பதிலாக அதை ஒரு சாதாரண நுழைவுத் தேர்வு எவ்வாறு நடைபெறுகிறதோ அதை போன்று பிரதிபலித்தாலே இங்கு தற்கொலை எண்ணம் மாணவர்களின் தாழ்வு மனப்பான்மை அறவே குறைந்து விடும்
இதற்கு தமிழக அரசு சிபிஎஸ்சி பாடத்திட்டத்திற்கு இணையான கல்வி முறையை அரசு பள்ளி மாணவர்களுக்கும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் கொடுத்தால் மட்டுமே இதில் பெரும் விமோசனம் உண்டு
இதை தவிர்த்து நாம் ஆளுநரை எதிர்ப்பதும் ஆளுநரை மாற்ற திட்டமிடுவதும் நீட் தேர்வை குறை கூறுவதும் அதை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் ஒரு தவறான மாய பிம்பத்தை ஏற்படுத்துவதற்கு சமம்
ஆகையால் தமிழக அரசு தமிழக மாணவர்கள் நீட் தேர்வை பயமின்றி எதிர்கொள்வதற்கான வழிகளை ஏற்படுத்த வேண்டும் நாம் மத்திய அரசு கொண்டுவரும் எந்தத் திட்டத்தையும் கண்டு அஞ்ச கூடாது எதற்கும் சளைத்தவர்கள் நாம் இல்லை என்பதை நாமும் நமது மாணவர்களும் நிரூபித்துக் காட்டக்கூடிய கட்டாயத்தில் உள்ளோம்
ஆனால் தமிழகத்தில் இருக்கக்கூடிய ஆளுநர் ரவி மாநில சுயாட்சிக்கு எதிராக நடந்து கொள்வது மிகவும் கண்டிக்கத்தக்கது கூட
நன்றி!..
என்றும் மக்கள் பணியில்
அண்ணா சரவணன்
வெள்ளாளர் முன்னேற்ற கழகம் மாநில தலைவர்








Leave a Reply